அந்நிய நாட்டில் கிடைத்ததோ ஆயிரம் கோடி பெறும் offer
ஆனாலும் ,
அயராமல் என் இந்திய நாட்டிற்கே உழைத்த நீ எங்கள் topper !
தோல்விகள் துரத்தியபோது துவண்டுபோகும் மனிதரிடையில்,
தோல்வியையே துரத்திய மாபெரும் மனிதன் நீ !
வாய்ச்சொல் வீரனையே அதிகம் காணும் இவ்வுலகில்,
வாய்ச்சொல்லையே வாழ்க்கையாக்கிய ஒரு வரலாறு !
உன் சிறப்பு இங்கு பலரின் சிந்தனை,
உன் வார்த்தை இங்கு பலரின் வாழ்க்கை!
எல்லோருடைய கவிதையும் வெறும் வார்த்தையே ,
உன் கவிதை உன் வாழ்க்கையே !
"சிட்டாய் பறந்திருப்பேன் சில அற்புதமும் செய்திருப்பேன் "
என்பர் சிலர் ,
சிட்டாய் பறந்து சில அற்புதமும் செய்து ,
simple ஆக வாழ்ந்த நீ என்றும் எங்கள் காவியம் !!
உமது நினைவினிலே இங்கு உறக்கம் தொலைத்த ...
ச .சதிஷ்
No comments:
Post a Comment